தற்போதைய செய்திகள்

EVKS இளங்கோவனுக்கு டிக் அடித்த தலைமை.. கண்ணீர் மல்க சீட் கேட்ட மக்கள் ராஜன் தற்போதைய நிலைப்பாடு என்ன? - பிரத்யேக பேட்டி

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது. சிட்டிங் எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா மறைந்ததால், அவர் குடும்பத்திற்கு யாராவது ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என சொல்லப்பட்டது. கடந்த சில நாட்களாக திருமகனின் தம்பியான சஞ்சய் சம்பத்தின் பெயர் அடிபட்டது. அதேபோல ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்திருந்தார்.

இச்சூழலில் திடீர் திருப்பமாக ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதற்கு நடுவே, காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், தலைமை தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். ஆனால் அவர் பேட்டி கொடுத்த பின், சில மணி நேரங்களில் ஈவிகேஎஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இச்சூழலில் மக்கள் ராஜனின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். 

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு