தற்போதைய செய்திகள்

நீட் தேர்வு மையத்தின் பெயரால் குழப்பம்..சோகத்துடன் திரும்பிச் சென்ற மாணவன்

தந்தி டிவி

தஞ்சாவூர் அருகே உள்ள புகழூரைச் சேர்ந்த பூபேஷ் என்ற மாணவனுக்கு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதே பெயரில் தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளியிலும் நீட் தேர்வு நடைபெறுகிறது. மாணவரின் ஹால் டிக்கெட்டில் தஞ்சாவூர் புறவழிச்சாலை என்று இருந்ததால், அந்த மாணவர் தஞ்சாவூரில் இருக்கும் பள்ளிக்குச் சென்றுள்ளார். அந்த மையத்தில் இருந்த அலுவலர்கள், கும்பகோணம் தேர்வு மையத்திற்கு செல்லுமாறு மாணவரிடம் கூறியுள்ளனர். தஞ்சாவூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் கும்பகோணத்திற்கு வந்த அந்த மாணவன், மதியம் 1.56 மணிக்கு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தார். இருந்தபோதிலும் கால அவகாசம் முடிந்து விட்டதாக கூறி, அவரைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால், அந்த மாணவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே