தற்போதைய செய்திகள்

முன்னாள் MLA மீது புகார்..லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர்நீதிமன்றம் கெடு

தந்தி டிவி

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யாவுக்கு எதிரான புகாரில், 2 மாதங்களில் விசாரணை முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த அரவிந்தாக்க்ஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யநாராயணன், தனது சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். சொத்து மதிப்பை மறைத்து போட்டியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, புகாரில் ஆரம்பகட்ட விசாரணை முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணையை 2 மாதங்களில் முடிக்க, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்