தற்போதைய செய்திகள்

"2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தால் கமிஷன்.." - போலீஸ் உடையில் லட்சக்கணக்கில் சுருட்டிய கும்பல்

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தால், ஒரு லட்ச ரூபாய்க்கு 20 ஆயிரம் கமிஷன் தருவதாக கூறி, 5 லட்ச ரூபாயை பறித்து சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்

சித்தூர் விகோட்டாவைச் சேர்ந்த ரியாஸ்கான் என்பவரை அணுகிய 5 பேர் கொண்ட கும்பல், தங்களுக்கு தெரிந்த சாமியாரிடம் அளவுக்கு அதிகமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அவற்றை மாற்றிக் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும், ஒரு லட்ச ரூபாய்க்கு, 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ரியாஸ்கானை 5 லட்ச ரூபாயுடன், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளனர். அப்போது, போலீஸ் உடையணிந்து விசாரணை நடத்துவது போல் வந்த அந்த கும்பல், அவரிடம் இருந்து பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். இது குறித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், வாகன தணிக்கையின் போது, 5 பேரையும் மடக்கி பிடித்து 2.5 லட்சம் பணம், ஒரு கார் மற்றும் போலீஸ் சீருடை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்....

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்