தற்போதைய செய்திகள்

அமித்ஷா குறித்து அவதூறு பேசிய காமெடி நடிகர்... அப்செட்டான தொண்டர்கள் சீறிபாய்ந்த கதை...

தந்தி டிவி

ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்த வெங்கடேசன் தற்போது மதுரையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, ஏஜென்சி முலம் விளம்பரம் எடுத்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் வெங்கடேசன் ஆக்டிவாக இருந்து வந்திருக்கிறார்.கடந்த சில மாதங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியை பற்றியும், பிரதமர் மோடி, அமித்ஷா பற்றியும் தவறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் வெங்கடேசன்.இதனால் பாஜக பிரமுகர்கள் வெங்கடேசனுக்கு மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன் காரில் சென்ற வெங்கடேசனை வழிமறித்த ஒரு கும்பல், அவரின் காலை மட்டும் குறிவைத்து அடித்து உடைத்திருக்கிறது.இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது தான், இவை அனைத்தும் வெங்கடேசனின் மனைவி பானுமதியின் மாஸ்டர் பிளான் என்று தெரிந்திருக்கிறது.

ஆம்..... வெங்கடேசனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருந்ததாக கூறப்படுகிறது.அந்த கள்ளக்காதல் விவகாரம் பானுமதிக்கு தெரியவர வெங்கடேசனை கண்டித்திருக்கிறார். ஆனால் வெங்கடேசனோ அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. தொடர்ந்து தகாத உறவை வளர்த்ததாக சொல்லப்படுகிறது.மனைவியுடன் சண்டை போட்டு விவாகரத்து கொடுத்து விட்டு தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடும் படி வற்புறுத்திதாக கூறப்படுகிறது.இதனால் கடுப்பான பானுமதி, கணவன் தனக்கு மட்டும் இருந்தால் போதுமென நினைத்து, அவரை வீட்டிலேயே முடக்கி வைக்க திட்டம் தீட்டி இருக்கிறார்.அது தான் இந்த கால் உடைக்கும் ப்ளான்.முதலில் வெங்கடேசனின் கார் ஓட்டுநர் மோகன் மூலமாக ராஜ்குமார் என்பவரிடம் ரேட்டு பேசி இருக்கிறார் பானுமதி. ஆனால் அவரோ ஒரு லட்சம் கேட்க அந்த திட்டத்தை கைவிட்டு இருக்கிறார்.அதன்பிறகு தான் தனது உறவினரான வைரமுத்துவிடம் நடந்ததை கூறி உள்ளார் பானுமதி. பாஜகவில் இருக்கு வைரமுத்துவுக்கு ஏற்கனவே வீடியோ விஷயத்தில் வெங்கடேசனின் மீது கட்டுக்கடங்காத ஆத்திரம் இருந்துள்ளது.

அந்த ஆத்திரத்தை பானுமதி கட்டவிழ்த்து விடவே, கடந்த 15 ஆம் தேதி வெங்கடேசனை வெளியே அழைத்து வந்து காலை உடைத்து மருத்துவமனையில் அனுமதித்தது விசாரனையில் வெளிவந்திருக்கிறதுவிசாரணை முடிவில் போலீசார் வெங்கடேசன் மனைவி பானுமதி, ராஜ்குமார் , மோகன், வைரமுத்து,மலை சாமி, ஆனந்தராஜ் ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் துளசி என்பவரை தேடி வருகின்றனர்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்