தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு - சதீஷ்குமார் மீதான குண்டர் சட்டம் உறுதியானது

தந்தி டிவி

கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீதான குண்டர் சட்டத்தை, அறிவுரை கழகம் உறுதி செய்தது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி, சத்யா என்ற கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. பொதுவாக குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டால், அந்த வழக்கிற்கு குண்டர் சட்டம் உகந்ததா? என சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் அறிவுரை கழகம் விசாரித்து உறுதி செய்யும். அதன்படி மாணவி கொலை வழக்கில் கைதான சதீஷ்குமார் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை, அறிவுரை கழகம் உறுதி செய்து உத்தரவிட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்