தற்போதைய செய்திகள்

Whatsapp-ல் மாணவியிடம் கல்லூரி முதல்வர் பாலியல் மெசேஜ் செய்ததாக பரவும் ஸ்கிரீன்சாட்ஸ்

தந்தி டிவி

Whatsapp-ல் மாணவியிடம் கல்லூரி முதல்வர் பாலியல் மெசேஜ் செய்ததாக பரவும் ஸ்கிரீன்சாட்ஸ் - "அனுப்பு.. பாத்துட்டு டெலிட் பண்ணிடுறேன்"

சென்னையில், கல்லூரி மாணவிக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் ரீதியில் சாட் செய்ததாக கல்லூரி முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, நந்தனம் ஒய்எம்சிஏ உடற் கல்வியியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர், சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் என்பவர், வாட்ஸ் அப்பில் அத்துமீறி சாட் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது புகைப்படத்தை கேட்பதும், அதற்கு மறுப்பு தெரிவித்தால், புகைப்படத்தை பார்த்துவிட்டு உடனடியாக டெலிட் செய்து விடுவதாக கூறுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவியின் புகைப்படத்துக்கு முத்தம் கொடுப்பது போன்ற ஈமோஜிகளை பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் அத்துமீறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்