தற்போதைய செய்திகள்

நண்பனை கொடூரமாக குத்தி கொன்ற சக நண்பர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

தந்தி டிவி

பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பிரகாஷ். இவர் அக்கரப்பாக்கம் பகுதியில் உள்ள மண் குவாரியில், அவருடைய நண்பர் சூர்யா என்பவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், சோழவரம் அருகே தனது உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த சூர்யாவை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரகாஷின் பணத் தேவைக்காக சூர்யா தனது அரை சவரன் நகையை கழட்டி கொடுத்தது தெரியவந்தது. இரண்டு வருடம் ஆகியும் நகையை திருப்பி தராததால் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் பிரகாஷ் கொலை செய்யப்பட்டது தெரியவர, சூர்யாவை போலீசார் சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்