தற்போதைய செய்திகள்

கோவையில் பயணியை பாதி வழியில் இறக்கி விட்ட தனியார் பேருந்து - பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்

தந்தி டிவி
• கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு என்பவர், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் உக்கடத்திலிருந்து காளப்பட்டி செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறினார். • காளப்பட்டிக்கு பயணச் சீட்டு கேட்ட போது, சரவணம்பட்டி வரை மட்டுமே பேருந்து செல்லும் என, ஓட்டுநர் கூறியதாக தெரிகிறது. • இது குறித்து ஓட்டுநரிடம் லோகு முறையிட்ட போது, காளப்பட்டி வரை செல்ல அனுமதி பெற்ற போதிலும், சரவணம்பட்டி வரை மட்டுமே பேருந்து இயக்கப்படுவதாக கூறி பயணிகளை இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. • இது தொடர்பாக, கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், லோகு வழக்கு தொடர்ந்தார். • இதை விசாரித்த ஆணையம், தனியார் பேருந்து உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்