தற்போதைய செய்திகள்

சிக்கலில் சிக்கிய ரீல்ஸ் தமன்னா.. அம்பலமான அதிர்ச்சி தகவல் - தேடி போய் தட்டி தூக்கிய போலீஸ்

தந்தி டிவி
• இன்ஸ்டாகிராமில் பட்டாகத்திகளுடன் ரீல்ஸ் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய இளம் பெண்ணை கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். • கோவையில் ஆவாரம்பாளையம் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவமும், நீதிமன்ற வளாகம் அருகே நடைபெற்ற கொலை சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. • இதையடுத்து, மாநகரம் முழுவதும் உள்ள ரவுடிகளையும், வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிடுபவர்களையும் போலீசார் தீவிரமாக நோட்டமிட்டு வந்தனர். • இதனிடையே, இன்ஸ்டாகிராமில் "Friends call me thamanna" என்ற பெயரில் கையில் பட்டாகத்தியுடன் வன்முறையை தூண்டும் வகையில் இளம் பெண் ஒருவர் ரீல்ஸ் பதிவிட்டிருந்தார். • இந்த ரீல்ஸ் வைரலாகி பரபரப்பான நிலையில், பதிவிட்ட இளம் பெண் முன்னாதாக குறிப்பிட்ட இரு கொலை சம்பவங்களில் தொடர்புடையவர்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வது தெரியவந்துள்ளது. • இதனிடையே, வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய ரீல்ஸ் குறித்து இளம் பெண் விளக்கம் தெரிவித்திருந்த நிலையில், தனிப்படை போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை தேடி வந்தனர். • இந்நிலையில், பெண்ணை கைது செய்துள்ள போலீசார், காவல்நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்