தற்போதைய செய்திகள்

செல்போன் வாங்கி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு... நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்

தந்தி டிவி
• கோவையில், தகராறின்போது நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். • கோவை வடவள்ளி அடுத்த வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகன் ராஜ் மற்றும் நம்பியழகம்பாளையம் பகுதியை சேர்ந்த மதன்ராஜ், ஆகிய இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். • கடந்த சில தினங்களுக்கு முன்பு, செல்போன் ஒன்று வாங்கி தருமாறு கூறி, மதன்ராஜிடம் ஜெகன்ராஜ் பணம் கொடுத்துள்ளார். • ஆனால் பணத்தை வாங்கிய மதன்ராஜ், செல்போன் வாங்கிக் கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. மதன்ராஜின் வீட்டிற்கு சென்ற ஜெகன்ராஜ், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். • அப்போது ஆத்திரமடைந்த மதன்ராஜ், ஜெகன்ராஜை கத்தியால் தாக்கியுள்ளார். • இதில், நிலைகுலைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • பின்னர், ஜெகன்ராஜின் உடலை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்ற மதன்ராஜ், வீரகேரளம் டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள மயானம் அருகில் வீசியுள்ளார். • இந்த விவகாரம் ஜெகன்ராஜின் உறவினர்களுக்கு தெரிய வர, புகாரின் பேரில் மதன்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்