தற்போதைய செய்திகள்

சென்னையில் கொக்கைன் விற்பனை - அடுத்தடுத்து சிக்கும் வெளிநாட்டு பெண்கள்

தந்தி டிவி

சென்னையில் கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நைஜீரியாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக, அண்ணாநகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பிரிஸ்கில்லா தான்சியா என்ற பெண்ணை கைது செய்து, கொக்கைனை பறிமுதல் செய்திருந்தனர். இதனையடுத்து, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்ததில், மேலும் இரண்டு பெண்கள் உட்பட 3 பேருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதன்படி, அவர்களையும் விசாரித்த போலீசார், பாண்டிச்சேரியில் தங்கி இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த லியோனார்டு என்பவரை கைது செய்து, 12 கிராம் கொக்கைனை பறிமுதல் செய்தனர். இவர், கொக்கைனை மொத்தமாக வாங்கி வந்து, வெளிநாட்டு பெண்களை, வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவர விசாரணை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்