தற்போதைய செய்திகள்

கிளாஸ் லீடரின் குடிநீர் பாட்டிலில் விஷ மருந்து கலந்த சக மாணவர்கள் - பாய்ந்த வழக்கு - சேலத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

சங்ககிரி அருகே, பள்ளி மாணவர்களின் குடிநீர் பாட்டிலில் விஷ மருந்து கலந்ததாக, சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் நாரணப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வகுப்பு தலைவராக இருக்கும் நிலையில், வீட்டுப்பாடம் செய்யாத சக மாணவர்கள் இருவர் மீது ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், வகுப்பு தலைவர் கொண்டுவந்த குடிநீர் பாட்டிலில் பூச்சி மருந்து கலந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடிநீரை குடித்த வகுப்பு தலைவர் மற்றும் அவரது நண்பர், அதில் மருந்து வாசம் வருவது குறித்து ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருந்து கலந்த தண்ணீரை குடித்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குடிநீரில் பூச்சி மருந்து கலந்த இரு மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை