தற்போதைய செய்திகள்

சொத்து தகராறால் ஏற்பட்ட மோதல்.. மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கிய சகோதரர்கள் - திருப்பத்தூரில் கொடூர சம்பவம்

தந்தி டிவி

திருப்பத்தூர் அருகே சொத்து தகராறில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரர்களை மருத்துவமனையினுள் புகுந்து தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஜோலார்பேட்டை அடுத்த சொரக்கன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்குமிடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதில், கோவிந்தராஜின் மகன்களான ஜானகிராமன் மற்றும் தாமோதரனை, ரவியின் மகன்களான திருமூர்த்தி மற்றும் கதிரேசன் ஆகியோர் தகராறில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்குள் புகுந்த திருமூர்த்தியும், கதிரேசனும் இருவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்து இருவரும் சேதப்படுத்திய நிலையில், திருமூர்த்தி மற்றும் கதிரேசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்