தற்போதைய செய்திகள்

டாஸ்மாக்கில் நடந்த சரமாரி தாக்குதல்.. போலீசுக்கு அரிவாளைக் காட்டி மிரட்டல் - பரபரப்பு காட்சி

தந்தி டிவி

தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் கட்டட தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதுடன், போலீசாரை அரிவாளைக் காட்டி மிரட்டி தப்பி ஓடிய கும்பலுக்கு காவல்துறை வலைவீசியுள்ளது.கோவில் பட்டியில் பாண்டவர்மங்கலம் டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டு இருந்த கட்டட தொழிலாளி சக்திவேல் மீது மது பாட்டில் மற்றும் சேர்களை வீசி 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரி தாக்குதல் நடத்தியது. உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வந்ததும் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயம் அடைந்த சக்திவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தாக்குதல் நடத்திய அதே கும்பல் பின் தொடர்ந்து வந்து அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளனர். அவர்களைப் பிடிக்க முயன்ற காவல் துறையினரையும் அக்கும்பல் அரிவாளைக் கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனார் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் புகைப்படங்களை சிலர் அவமரியாதை செய்ததாகக் கூறி சக்திவேல் மற்றும் சிலர் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஒருவேளை இதை மனதில் வைத்துக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், டாஸ்மாக் பாரில் தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகளைப் பார்க்கலாம்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு