தற்போதைய செய்திகள்

"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்" - அமைச்சர் சேகர்பாபு

தந்தி டிவி

செங்கல்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, ஆட்சியர் ராகுல்நாத் எம்.எல்.ஏ வரலட்சுமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 226 புறநகர் பேருந்துகள், அரசு பேருந்துகள், 64 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில், பார்க்கிங் வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, போதிய வெளிச்சம், தானியங்கி நடைமேடை ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும், பேருந்து நிலையத்தில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்று விட்டதாகவும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை