தற்போதைய செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு... திரைப்பட ஒளிப்பதிவாளரை அடித்து கொன்ற கணவன் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

தந்தி டிவி
• மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சரவணமருது என்பவருக்கும், திருவாதவூர் சமத்துவபுரத்தை சேர்ந்த மாலதி என்ற பெண்ணுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. • சக்திவேல் என்பவரை திருமணம் செய்த மாலதிக்கு, ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. • இந்த நிலையில், கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சரவணமருது, வீடு திரும்பாததால், அவரது சகோதரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். • அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், சந்தேகத்தின் பேரில் சக்திவேலிடம் தங்களது பாணியில் விசாரணை மேற்கொண்டனர். • அப்போது, மனைவி மாலதியுடன் சரவணமருது தகாத உறவில் இருந்ததாகவும், ஆத்திரத்தில், தனது மாமனார் முருகன் மற்றும் மைத்துனர் ராஜபிரபுவுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்ததாகவும் தெரிவித்தார். • கொலையை மறைக்க, கீரனூர் கண்மாய் பகுதிக்கு அருகே உடலை புதைத்தாகவும் கூற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். • அதனைத் தொடர்ந்து, சக்திவேல், முருகன், ராஜபிரபு ஆகியோரை கைது செய்த போலீசார், சரவண மருதுவின் உடலை தோண்டி எடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்