தற்போதைய செய்திகள்

சீனா - பாகிஸ்தான் நட்பு.. "துரியோதனன்-கர்ணன் நட்பால் குலநாசம்தான்..." - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

தந்தி டிவி

துரியோதனன்-கர்ணன் நட்பால் குலநாசம்தான் என பாகிஸ்தான், சீனாவின் நட்பை ஒப்பிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக சாடியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஜெய்சங்கர் தனது இந்தியாவின் வழி புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியில் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது சீனா அசாதரணமான அண்டை நாடு என்ற ஜெய்சங்கர், சீனா சூப்பர் பவரானால் அதன் அருகிலிருப்பது சவாலானது எனக் கூறினார். பயங்கரவாதத்தால் இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது என பட்டியலிட்டவர், பாகிஸ்தானை விமர்சித்தார். பாண்டவர்களால் உறவுகளை தேர்வு செய்யமுடியவில்லை என்ற ஜெய்சங்கர், நம்மால் அண்டைய நாடுகளை தேர்ந்தெடுக்க முடியாது எனவும் இயற்கையாவே நல்ல எண்ணம் மேலோங்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார். வரம்பு விதிகளை மீறிய துரியோதனன்-கர்ணன் நட்பால் அவர்களுக்கோ, அவர்களது குலத்திற்கோ நன்மை கிடைக்கவில்லை, அவர்கள் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் மறைமுகமாக சீனா, பாகிஸ்தானை ஜெய்சங்கர் சாடினார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்