தற்போதைய செய்திகள்

"மிளகாய் பொடி தூவி... போலீசார் அரங்கேற்றிய கொடூரம்..."அலறி துடித்த பெண்கள்

தந்தி டிவி

போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகேயுள்ள புளியாண்டப்பட்டி கிராமத்தில், குறவன் சமுதாயத்தை சேர்ந்த ரேணுகா, தமிழரசன், அருணா, கண்ணம்மாள் சத்யா உள்ளிட்ட 10 பேரை, கடந்த 11-ம் தேதி, திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரிக்க, ஆந்திரா போலீசார் அழைத்து சென்றனர். இந்த திருட்டு வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர். இந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் வைக்கப்பட்டிருந்த 10 பேரில், 8 பேரை கம்யூனிஸ்ட் கட்சியினரும், குறவன் சங்கத்தினரும் புகாரின் பேரில் மீட்டனர். இதனிடையே விசாரணைக்கு அழைத்துச் சென்ற சித்தூர் போலீசார், உடலில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதில் இரண்டு பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆந்திரா போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மற்ற இருவரையும் மீட்டுத் தரவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்