தற்போதைய செய்திகள்

கள்ளக்காதலனுடன் போதையில் உல்லாசம்..தடையாக இருந்த ஒரு வயது குழந்தை ... ஜோடியாக சுவற்றில் தூக்கி ஒரே அடி...! - சேலத்தில் நடந்த கொடூரம்

தந்தி டிவி

சேலத்தில் தவறான உறவுக்கு இடைஞ்சலாக இருந்த இளம் பிஞ்சானஒரு வயது குழந்தையை, சுவற்றில் அடித்து கொலை செய்த தாய் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் காடம்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் சக்திவேல் கலைவாணி தம்பதியினர் வேலை பார்த்து வந்தனர். கலைவாணிக்கு, சக்திவேல் மூன்றாவது கணவர் என கூறப்படுகிறது.இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இதே சூளையில் வேலை பார்த்து வந்த மல்லேஷ் என்வருடன் கலைவாணிக்கு தவறான உறவு ஏற்பட்டுள்ளது. பின்னர் கலைவாணி, மல்லேஷுடன் சேர்ந்து புதூர்காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில், கணவன் மனைவி என கூறி குழந்தையுடன் தங்கி வேலை பார்த்துள்ளனர். அப்போது, இருவரும் மது போதையில், தவறான உறவுக்கு இடைஞ்சலாக இருந்த குழந்தையை சுவற்றில் அடித்துள்ளனர். இதில் மயக்கமடைந்த குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இருவரும் தப்பி ஓடி உள்ளனர்.பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து, கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் கர்நாடகாவில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்