தற்போதைய செய்திகள்

அதிமுக தலைமை அலுவலம் அமைந்துள்ள சாலைக்கு பெயர் சூட்டும் முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி

சென்னையில் அதிமுக தலைமை அலுவலம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலைக்கு "வி.பி.ராமன் சாலை" என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பெயர் சூட்டுகிறார். .

தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில், பல்வேறு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையுடன் கூடி நவீன நெல் சேமிப்பு தளங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மேலும், புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்தினை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் மானியத்திற்கான காசோலையை வழங்குகிறார்.

பின்னர், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி்.பி. ராமன் வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் என பெயரிடப்பட்ட வீடு அமைந்துள்ள பகுதியான, அவ்வை சண்முகம் சாலைக்கு "வி.பி.ராமன் சாலை" என பெயர் சூட்டி பெயர் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள இந்த சாலையின் பெயரை மாற்றுவதற்கு, ஏற்கனவே அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த‌து குறிப்பிடத்தக்கது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்