தற்போதைய செய்திகள்

"ஆளுநர் போட்ட உத்தரவை இல்லாமல் செய்துவிட்டார் முதல்வர்" - திருச்சி சிவா பேச்சு

தந்தி டிவி

பட்டமளிப்பு விழாவுக்கு கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என்ற ஆளுநரின் உத்தரவை, முதல்வர் ஸ்டாலின் இல்லாமல் செய்துவிட்டதாக எம்.பி.திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் பொது வாழ்வை கவுரவிக்கும் நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என ஆளுநர் உளறியிருப்பதாக விமர்சித்தார். அதனைத்தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கூறியதாகவும், ஆனால் அந்த உத்தரவை முதல்வர் ஸ்டாலின் இல்லாமல் செய்துவிட்டதாகவும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்