தற்போதைய செய்திகள்

கனக சபையின் மீதேறி சாமி தரிசனம் ..செய்ய முயன்ற பக்தை..தடுத்து நிறுத்திய தீட்சிதர்கள் - சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரபரப்பு

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபையின் மீதேறி சாமி தரிசனம் செய்ய முயன்ற பக்தையை கீழே இறங்க சொல்லி தீட்சிதர்கள் வற்புறுத்தியதால் வாக்குவாதம் எழுந்தது.

மகா சிவராத்திரி மற்றும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நடராஜர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கனக சபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய ஒரு சிலர் முயற்சித்த போது ஜெயசீலா என்ற பக்தையும் அதன்மீதேற முயன்றுள்ளார். தீட்சிதர்கள் கோபமடைந்து அப்பெண்ணை கீழே இறங்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் எழுந்தது. அப்பெண் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே போலீசார் தீட்சிதர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு ஆணைப்படி பக்தர்களை கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆலோசனை செய்வதாக கூறிச் சென்ற தீட்சிதர்கள் இன்னும் திரும்பாத நிலையில், கோயில் அலுவலகமும் பூட்டப்பட்டுள்ளதால் காவல்துறையினர் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’