• சென்னையில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட, ஆந்திராவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
• சென்னை தியாகராய நகரில் பாலியல் தொழில் நடப்பதாக, பாலியல் குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
• இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஒருவார காலமாக போலீசார் கண்காணித்து வந்த நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த அல்லாடி பாலா ராமகிருஷ்ணா என்பவர், பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.
• மேலும் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பெண்களின் புகைப்படத்தை அனுப்பி பாலியல் தொழில் செய்ததும் தெரியவந்தது.
• இதையடுத்து ஆந்திர நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட 2 பெண்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.