தற்போதைய செய்திகள்

சென்னையில் வழக்கறிஞரை கொன்ற சம்பவம்..! நீதிமன்றத்தில் சரணடைந்த 3 பேரை போலீஸ் முன்னே சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்

தந்தி டிவி
• சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில், 3 இளைஞர்கள், விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தபோது, அவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தினார்கள். • சென்னை பெருங்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்கணேஷ், கடந்த 25-ந் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். • இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். • போலீசார் தேடுவதை அறிந்த, கொலை வழக்கில் தொடர்புடைய நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மீன் பிரவீண், முருகன், ஸ்ரீதர் ஆகிய 3 பேரும் விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர். • அவர்கள் 3 பேரையும் வரும் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி ராதிகா உத்தரவிட்டார். • இதையடுத்து 3 பேரையும் போலீசார், பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து வேனில் அழைத்துச் சென்றனர். • அப்போது அவர்களை கண்டித்து வழக்கறிஞர்கள் முழக்கம் எழுப்பியதோடு, கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்