தற்போதைய செய்திகள்

சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயில் - டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

தந்தி டிவி

சென்னை - கோவை வழிதடத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நாளை சென்னை சென்ட்ரலில் இருந்து தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில், அந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆறு மணி நேர பயணம் என்பதால், உணவுக்கான கட்டணமும் டிக்கெட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், குளிர்சாதன chair car டிக்கெட் கட்டணம் ஆயிரத்து 215 ரூபாயாகவும், குளிர்சாதன executive chair car டிக்கெட் கட்டணம் இரண்டாயிரத்து 310 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் உணவு வேண்டாம் என்பவர்களுக்கு முறையே ஆயிரத்து 57 ரூபாய் மற்றும் இரண்டாயிரத்து 116 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் கோவையில் காலை 6 மணியளவில் புறப்படும் வந்தே பாரத் ரயில், காலை 11.50 மணியளவில் சென்ட்ரல் வந்தடையும். மதியம் 2.25 மணியளவில் சென்னை சென்ட்ரலில் புறப்படும் ரயில், இரவு 8.15 மணியளவில் கோவை சென்றடைகிறது.

BREAKING || தவெக MLA முஸ்தபாவிடம் ரூ.15 கோடி குதிரை பேர புகார் - வந்த பரபரப்பு உத்தரவு

BREAKING || விக்கிரவாண்டி Toll வழியே 82,000 வாகனங்கள்- இரவு, பகலாக சாரை சாரையாக படையெடுக்கும் மக்கள்

DVAC | ED | DuraiMurugan | ரூ.1427 கோடி விவகாரம்.. துரைமுருகன் மீது DVAC வழக்குப்பதிவு

BREAKING || பெரும் பரபரப்பை கிளப்பிய விவகாரம்... உண்மையை உடைத்து வருத்தம் தெரிவித்த துரைமுருகன்

Anbumani | பூதாகரமாகும் பெரியார் அறிவுலக ஊழல் புகார்.. அன்புமணி சொன்ன விசயம்