தற்போதைய செய்திகள்

MLA மனைவி வார்டில் தரமற்ற சாலை.. தரமில்லாத தார்க்கலவையா? - ஆய்வில் வெளிவந்த உண்மை!

தந்தி டிவி
• சென்னை வளசரவாக்கத்தில் சாலை அமைக்கும் பணிகள் தரமாக இல்லாததால், திரும்பப் போட ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டு, பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. • சென்னை மாநகராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை கண்காணிக்க ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. • வளசரவாக்கம் மாருதி நகர், முதல் பிரதான சாலையில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றபோது, அங்கு வந்த ஆய்வுக் குழுவினர், பரிசோதனை செய்தனர். • சாலையில் கொட்டப்பட்ட தார்க்கலவையின் வெப்பநிலையை சரிபார்த்தபோது • அது சாலை அமைக்க ஏற்ற தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது. • இதையடுத்து, மீண்டும் தார்ச்சாலை அமைக்க ஒப்பந்ததாரருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். • தரமற்ற சாலை அமைத்து அதனை சுரண்டி எடுத்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். • மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டலம் 150 வது வார்டு, சட்டமன்ற உறுப்பினர் கணபதியின் மனைவி ஹேமாவதி வார்டு என்பது குறிப்பிடத்தக்கது. • அவரது வார்டில், தரமற்ற சாலை அமைப்பதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்து பணிகளை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி