தற்போதைய செய்திகள்

அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்த தங்கை - சென்னையை அதிர வைத்த சம்பவம் | Chennai

தந்தி டிவி
• பெரம்பூர் சபாபதி தெருவில் வசிக்கும் முனிரத்தினம் என்பவரின் பூர்விக வீட்டின் ஒரு பகுதியை, அதே வீட்டில் மற்றொரு பகுதியில் வசித்து வரும் அவருடைய தங்கை தனலட்சுமி, அவருக்குத் தெரியாமல் எழுதி வாங்கிக் கொண்டதாகத் தெரிகிறது. • இதை எதிர்த்து, முனிரத்தினம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. • இந்நிலையில், அதிகாலை உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், முனிரத்தினம் அலறியதால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். • சம்பவம் தொடர்பாக திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, முனிரத்தினம் மீது தனலட்சுமி பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. • இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். காயமடைந்த முனிரத்தினம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்