தற்போதைய செய்திகள்

கடன் கேட்டு சென்றவரிடமே கோடிக்கணக்கில் பணத்தை அமுக்கிய பலே கில்லாடிகள்.. அலேக்கா தூக்கிய சென்னை போலீஸ்

தந்தி டிவி
• சென்னையில் 100 கோடி ரூபாய் கடன் தருவதாகக் கூறி, 4 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். • மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ஷியாமல் சட்டர்ஜி என்பவர், தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கு சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இயங்கி வந்த ஈஸ்ட் கோஸ்ட் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார். • அவருக்கு 100 கோடி ரூபாய் கடன் தருவதாக உறுதி அளித்த அந்த நிறுவனத்தினர், முன் வைப்புத்தொகையாக 4 கோடி ரூபாய் கேட்டுள்ளனர். அதை நம்பிய ஷியாமல் சட்டர்ஜி, 4 கோடி ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளார். • ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் தலைமறைவானதால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஷியாமல் சட்டர்ஜி புகார் கொடுத்தார். • இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். • இந்நிலையில், சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள சொகுசு விடுதியில் பதுங்கியிருந்த பன்னீர்செல்வம், இம்தியாஸ் அகமது என்கிற சதீஷ்குமார், பவன்குமார் என்கிற ரவி ஆகிய மூவரையும் கைது செய்தனர். • ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு