தற்போதைய செய்திகள்

சூப்பர்வைசர் பாலியல் தொல்லை.. டீயில் பேதி மருந்து கலந்து கொடுத்த 3 சிறுமிகள் - உரிமையாளர் தாக்கியதால் செய்த செயல்

தந்தி டிவி
• சென்னையை அடுத்த மணலி அருகே 3 சிறுமிகளின் தற்கொலை முயற்சிக்கு காரணமான கடை உரிமையாளர் மற்றும் சூப்பர்வைசரை போலீசார் கைது செய்தனர். • மணலி மாத்தூரை சேர்ந்த 17 வயதான 3 சிறுமிகள்அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தனர். • அவர்களுக்கு கடை சூப்பர்வைசரான சந்திரசேகரன் என்ற 62வயதான நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. • இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமிகள் சந்திரசேகரனுக்கு டீயில் பேதி மாத்திரையை கலந்து கொடுத்ததாக தெரிகிறது. • இது குறித்து தகவலறிந்த கடை உரிமையாளர் செந்தில் குமார் 3 சிறுமிகளையும் தாக்கி வேலையிலிருந்து அனுப்பி விட்டதால் மனமுடைந்த சிறுமிகள் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். • அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சூப்பர்வைசர் சந்திரசேகரன் மற்றும் கடை உரிமையாளர் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்