தற்போதைய செய்திகள்

ஏர்போர்ட் ஊழியரை துண்டு துண்டாக வெட்டி கோவளம் பீச்சில் புதைத்த பாலியல் தொழிலாளி.. சென்னை போலீசை அதிரவைத்த வாக்குமூலம்

தந்தி டிவி
• சென்னை விமான நிறுவன ஊழியரை, கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்தாக பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தன் என்பவர், சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். • கடந்த 18ந் தேதி பணிக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை. • இது தொடர்பான புகாரின் பேரில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாலியல் தொழிலாளியான பாக்கியலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். • அப்போது பாக்கியலட்சுமி, தனக்கும் ஜெயந்தனுக்கும் 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், 2021ம் ஆண்டில் இருவரும் பிரிந்து விட்டதாகவும், கடந்த மாதம் தன்னை பார்ப்பதற்காக மீண்டும் வந்த ஜெயந்தன் தகராறு செய்ததால், அவரை கொலை செய்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். • மேலும், ஜெயந்தனின் உடலை துண்டு துண்டாக வெட்டி கோவளம் கடற்கரை அருகே புதைத்து விட்டதாகவும் பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார். • இதனையடுத்து போலீசார், ஜெயந்தனின் உடலை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு