தற்போதைய செய்திகள்

கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் - கேரளா விரைந்த தனிப்படை போலீசார்

தந்தி டிவி
• கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரின் விசாரணைக்காக, தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்றுள்ளனர். • சென்னை, திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டையில் உள்ள ருக்மணி தேவி கலை கல்லூரியில், கடந்த 2019-ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மாணவி படித்து வந்தார். • தான் படித்த காலகட்டத்தில், கல்லூரியில் நடன உதவி பேராசிரியராக பணியாற்றிய ஹரி பத்மன் என்பவர், தனக்கு பல்வேறு வகைகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகாரளித்துள்ளார். • மேலும், இதன் காரணமாக தான் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் மாணவி குறிப்பிட்டிருந்தார். • இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார், இரண்டு பிரிவுகளின் கீழ் ஹரி பத்மன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். • மேலும், மாணவி பயின்ற கல்வியாண்டில், அவருடன் படித்த மாணவிகள் மூன்று பேர் தற்போது கேரளாவில் இருப்பது தெரிய வந்துள்ளது. • எனவே, இந்த வழக்கு தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக, போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்