தற்போதைய செய்திகள்

பறந்து வந்த சென்னை எக்ஸ்பிரஸ்.. தண்டவாளத்தில் சைக்கிளுடன் வந்த நபர்.. சுக்குநூறான பயங்கரம்

தந்தி டிவி

சென்னை - மங்களூரூ எக்ஸ்பிரஸ் விருதாச்சலம் அருகே வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒருவர் சைக்கிளுடன் வந்துள்ளார். பின்னர், சைக்கிளை தண்டவாளத்தில் போட்டு விட்டு தப்பி ஓடினார். ரயிலில் சிக்கிய சைக்கிள் சின்னா பின்னமானது. ஆனாலும் ரயில் இன்ஜினுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் சுமார் 21 நிமிடங்கள் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

மேலும் தப்பியோடி வந்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இதனிடையே, அதே ரயில் லால்குடி ஸ்டேஷன் அருகே வந்த போது 10 மற்றும் 12 வது பெட்டியில் இருந்து புகை வந்தது. இது குறித்து ரயில் இன்ஜின் டிரைவருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலை தொடர்ந்து ரயில் ஸ்ரீரங்கம் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பழுது நீக்கப்பட்டது. தொடர்ந்து 41 நிமிடங்கள் தாமதத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் மொத்தமாக 70 நிமிடங்கள் தாமதத்தால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்