தற்போதைய செய்திகள்

சென்னை தியேட்டரில் 'சினிமா' பணத்தை கொடுத்து ஸ்நாக்ஸ் வாங்கிய சினிமா நடிகர் - விசாரணையில் மற்றுமொரு பகீர் தகவல்

தந்தி டிவி
• சினிமாவில் பயன்படுத்தக்கூடிய போலி ரூபாய் நோட்டினை கொடுத்து, திரையரங்க கேண்டினில் பண்டங்கள் வாங்க முயன்ற சினிமா துணை நடிகரை போலீசார் கைது செய்தனர். • தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் ராஜ், சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கி சினிமாவில் ஜீனியர் ஆர்டிஸ்ட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். • இந்நிலையில், கமலா திரையரங்க கேண்டினில் 500 ரூபாய் கொடுத்து ஐயப்பன் ராஜ் பண்டங்கள் வாங்கிய போது, ரூபாய் நோட்டு போலியானது என்பதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். • உடனே, விருகம்பாக்கம் போலீசாரிடம் ஊழியர்கள் தகவல் தெரிவித்த நிலையில், ஐயப்பன் ராஜை போலீசார் கைது செய்தனர். • விசாரணையில், அவர் தங்கியிருக்கும் விடுதிக்கு முன்பணமாக கொடுத்த ஆறாயிரம் ரூபாய் பணமும் போலியானது என்பது தெரியவந்துள்ளது. • இந்த போலி ரூபாய் நோட்டுகள் சினிமாவில் பணிபுரியும் போது, ஒருவர் கொடுத்ததாக ஐயப்பன் ராஜ் தெரிவித்த நிலையில், அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை