தற்போதைய செய்திகள்

மனைவியுடன் முற்றிய சண்டை... ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற பயங்கரம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு கிராமத்தை சேர்ந்த மணி என்பவரும், சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கௌசல்யா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். • இரண்டு மாதங்களுக்கு முன்பு கௌசல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாய் வீட்டில் வசித்து வந்தார். • இதனிடையே, கௌசல்யாவை சந்திக்க மணி வந்த போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. • இதனால் ஆத்திரமடைந்த மணி, இரண்டு மாத குழந்தையை சுவற்றில் அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற செம்மஞ்சேரி போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்