தற்போதைய செய்திகள்

17 வயது சிறுமிக்கு காதல் திருமணம்.. அம்மா வீட்டில் நடந்த அதி பயங்கரம்.. மாமியாருக்கு போலீசார் வலைவீச்சு - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும், மதுராந்தகம் அருகே நாகமலை கிராமத்தை சரத்குமார் என்ற இளைஞரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். • மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்றோர் வீட்டிற்கு வந்த சிறுமி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு கொண்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. • தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • 18 வயதுக்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கணவர் சரத்குமார் மற்றும் அவரது தந்தையை கைது செய்தனர். • தலைமறைவான சிறுமியின் மாமியார் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்