தற்போதைய செய்திகள்

கேங் ரேப் வழக்கில் திடீர் ட்விஸ்ட்..! காதலனை சிக்க வைக்க நாடகமாடிய காதலி... போலீசையே மிரள வைத்த இளம்பெண்..!

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில், சுமார் 2 மணி அளவில் கிருஷ்ணவேணி என்பவரது வீட்டின் கதவை பெண் ஒருவர் தட்டியுள்ளார்.

அப்போது அந்தப் பெண் கிருஷ்ணவேணியிடம், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, தன்னை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்களிடமிருந்து போராடி தப்பி வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பெண் குறித்தும், நடந்த சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தியபோது, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 21-வயது மதிக்கத்தக்க பெண் என்பதும், சென்னை சைதாப்பேட்டையில் தங்கி, தனியார் நிறுவனத்தில் டெலிகாலராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

அந்தப் பெண்ணிற்கும், உத்திரமேரூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியை சேர்ந்த சலீம் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, கடந்த 2 மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

மேலும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திந்து வந்துள்ளனர்.

திருமணம் செய்ய சலீமை அந்தப் பெண் பலமுறை வற்புறுத்தியும், திருமணம் செய்ய முடியாது என சலீம் மறுப்பு தெரிவித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இரவு நேரத்தில் செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்த பெண்ணை, தனிமையில் சந்தித்து பேச, சாலவாக்கம் அருகே மாம்பாக்கம் பகுதிக்கு சலீம் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு, இருவருக்கும் இடையே திருமணம் செய்து கொள்வதில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சலீம், அந்தப் பெண்ணை தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

சலீமின் செயலால் கோபமடைந்த பெண், ஏதாவது செய்து அவரை போலீசாரிடம் சிக்க வைக்க திட்டம் தீட்டியுள்ளார். அதன் மூலமே கூட்டு பாலியல் பலாத்காரம் என்ற நாடகத்தை அரங்கேற்றியது விசாரணையில் அம்பலமானது.

அதாவது, நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியதாக காவல்துறையினரிடம் பெண் கூறியதால், செங்கல்பட்டு நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது சம்பந்தப்பட்ட பெண், சலீமுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், பெண்ணிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டபோது, உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. 

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு