தற்போதைய செய்திகள்

முதியோர் காப்பகத்தில் பாலியல் சீண்டல்... ரகசிய வீடியோவால் அம்பலமான உரிமையாளர்...

தந்தி டிவி

செங்கல்பட்டு - பனங்காட்டுப்பாக்கம்.

முதியோர் காப்பகத்தில் பாலியல் சீண்டல்...

ரகசிய வீடியோவால் அம்பலமான உரிமையாளர்...

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நடந்த கொடூரம்...

வைரலான வீடியோ ஆதாரத்தால் சிக்கிய காமுகன்...

காப்பகத்தில தங்கி இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பொன்னுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்காரு ஒரு காப்பக உரிமையாளர்..

வெளியே சொல்லுற அளவுக்கு அவங்களுக்கு விவரம் பத்தாதுங்குற தைரியத்துல இருந்தவருக்கு கடைசியா ஆப்பு வச்சுருக்கு ஒரு வீடியோ ஆதாரம்..

கண்களை முகத்தில் புதைத்துக் கொண்டு, நடுங்கும் கைகளை நம்பிக்கையோடு நம் முன்னால் ஏந்தும் எத்தனையோ முதியவர்களை பார்த்திருக்கிறோம்..

குடும்பத்திற்கு பாரமென பிள்ளைகளே விட்டுச் சென்ற சிலர்… நாம் ஏன் பாரமாக இருக்க வேண்டும் என நினைத்து யாருக்கும் சொல்லாமல் பிரிந்து வந்த சிலர்.. இப்படி கைவிடப்பட்ட முதியவர்களுக்கு மிச்சமிருக்கும் வாழ் நாட்களை கடத்துவதற்கு ஒரு தற்காலிக கூடாக இருப்பது முதியோர் இல்லங்கள் தான்.

.

அன்பு, கருனை, ஆதரவு என பல பாசப்பெயர்களில் ஊருக்குள் எத்தனையோ காப்பகங்கள் இயங்க வருகின்றன.

உண்மையிலேயே சேவை மனப்பான்மையோடு தேடித்தேடி உதவும் எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் இருக்கதான் செய்கின்றன.

ஆனால் அவர்களுக்குள்ளேயே சில பசுந்தோல் போர்த்திய நரிகளாக பலர் கொடூர செயலகளில் ஈடுபடுவதை சமீப காலங்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி ஆள் கடத்தல், பாலியல் வண்கொடுமைகள் என அடுக்கடுக்காக வெளிவந்த செய்திகள் மாநிலத்தையே உலுக்கி போட்டது.

இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் ஒரு காப்பகம் சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறது.

போலீசார், மாவட்ட ஆட்சியர், சமூக நலத்துறை அதிகாரிகள் என மாவட்ட நிர்வாகத்தின் முக்கியமான அத்தனை பேரும், சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

அதிகாரிகள் பல்வேறு நபர்களிடம் விசாரனை நடத்திவிட்டு அடுத்த கட்ட நடவடிகைகள் என்ன என்பதை தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருப்பதை, ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது ஒரு முதியவர்களின் கூட்டம்.

ஆதரவற்றவர்கள், முதியோர்கள், மன நலம் பாதிக்கபட்டவர்கள் என சமூகத்தால் கைவிடப்பட்டவர்களை உள்ளங்கையில் தாங்குவதாக சொல்லிக் கொண்டிருந்த ஒரு ஆதரவற்றோர் காப்பகம் தான் இது. ஆனால் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்த முதியவர்கள் அனைவரும் மாற்று இடத்திற்கு அனுப்பி வைக்கபட்டிருக்கிறார்கள்.

பல மணி நேரம் நடந்த தீவிர விசாரனைக்குப் பிறகு போலீசாரால் கைது செய்து அழைத்துச் செல்லப்டும் இவர்தான் இந்த காப்பகத்தின் உரிமையாளர் வீரமணி.

இணையத்தில் வைரலான ஒரு வீடியோ ஒரு நிமிடத்தில் வீரமணியின் சாம்ராஜ்ஜியத்தை தரைமட்டமாக்கி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் , திருப்போருர் அருகே உள்ள பனங்காட்டுப்பாக்கம் என்ற பகுதியில் 20 வருடங்களுக்கு மேல் இயங்கி வருகிறது இந்த அன்பகம். வயதானவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், என 67 பேர் இங்கு தங்கியிருந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த காப்பக்கத்தின் உரிமையாளர் வீரமணி ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.

அன்பகத்தை பற்றி தெரிந்த அனைவரையும் அந்த வீடியோ அதிர்ச்சியடைய வைக்க, அடுத்த சில நிமிடங்களில் அது வைரல் கண்டன்டாக மாறி இருக்கிறது.

இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில் போலீசார் விசாரனையை தெடங்கி இருக்கிறார்கள். அபோது தான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்திருக்கிறது.

அந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் 100 சதவிகிதம் உண்மையானவை. தனது காப்பகத்தில் தங்கி இருந்த ஒரு மனநலம் பாதித்த பெண்ணுக்கு தான் அந்த கொடுமையை நிகழ்த்தியிருந்தார் வீரமணி.

இன்றல்ல நேற்றல்ல.. பல நாட்களாக வீரமணியின் வக்கிரம் தொடர்ந்திருக்கிறது. இதனை ரகசியமாக நோட்டமிட்ட காப்பகத்தின் ஊழியர் ஒருவர் அந்த பயங்கரத்தை மறைந்திருந்து வீடியோவாக எடுத்திருக்கிறார்.

ஆனால் அவர் அந்த வீடியோவை வைத்து நீதி வாங்கிக் கொடுக்க நினைக்காமல், வீரமணியிடமிருந்து நிதி திரட்டவே நினைத்திருக்கிறார்கள்.

2 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டி இருக்கிறார். ஆனால் வீரமணியோ ஒரு நயா பைசா கூட கிடையாது என கராரக மறுத்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர் வீரமணியின் பாலியல் அத்து மீறலை இந்த உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், வீரமணியை கைது செய்து விசாரித்து வருக்கிறார்கள். முதியோர் காப்பகத்தில் இருந்தவர்களை மீட்டு பத்திரமாக வேறொரு காப்பக்கத்தில் சேர்ந்த்திருக்கிறார்கள்.முழுமையான விசாரணைக்கு பிறகு இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வரும் என்று சொல்லப்படுகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்