தற்போதைய செய்திகள்

சென்னை வரும் பிரதமர் மோடி - பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் மத்திய குழு

தந்தி டிவி

பிரதமர் மோடி 8ம் தேதி சென்னை வர உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய சிறப்பு குழு வந்துள்ளது.

• பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், ராமகிருஷ்ணா மடம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகிய இடங்களை ஆய்வு செய்கின்றனர். • சென்னை பழைய விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடக்கிறது. • இந்தக் கூட்டத்தில் பிரதமரின் சென்னை நிகழ்ச்சிகள் பற்றி விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும். • தற்போது திட்டமிடப்பட்டுள்ள பிரதமரின் நிகழ்ச்சிகளின் நேரங்களில் சிறிய அளவில் மாற்றங்கள் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. • ஆனால் பிரதமர் பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக சென்னை நகருக்குள் சாலை வழி பயணத்தை கூடிய மட்டிலும் தவிர்த்து ஹெலிகாப்டர் பயணத்தை மேற்கொள்வார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி