தற்போதைய செய்திகள்

கண்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு வெடிகுண்டு வெடிக்க இத்திருப்பதாக.. பட்டதாரி இளைஞர் பகீர் மிரட்டல்

தந்தி டிவி

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்தார்.

மர்மநபர் பேசிய செல்போன் எண்ணைக் கொண்டு, அவரைக் கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

மீஞ்சூர் அருகே. செல்போன் சிக்னல் காட்டியதைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார், ரயில் நிலையத்தில் இருந்த நபரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த லோகேஷ் என்கிற விக்னேஷ் என்பதும், பட்டதாரி இளைஞர் என்பதும் தெரியவந்தது.

பின்னர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூரில் கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை

CM Vijay | Kolathur MLA | ஹாஸ்பிடலில் கொளத்தூர் எம்.எல்.ஏ | நலம் விசாரிக்க நேரில் சென்ற CM விஜய்

CM Vijay | Kolathur MLA | ஹாஸ்பிடலில் புகுந்த CM விஜய்.. மருத்துவ குழுவிடம் விசாரணை

Deed Registration | வருகையில்லா பத்திரப்பதிவு நடைமுறையில் மாற்றம் | வெளியான முக்கிய அறிவிப்பு

TNEB Office | CM Vijay | ஆபீஸுக்குள் நடந்தது.. வெளியான CM விஜய் வீடியோ