• கள்ளக்குறிச்சியில் ஜெராக்ஸ் எடுப்பது போல் நடித்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை திருடி சென்ற நபரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
• கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு வந்த நபர், ஒரு பேப்பரை அளித்து ஜெராக்ஸ் எடுக்குமாறு கூறியுள்ளார்.
• அதன்படி கடை ஊழியர் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது அந்த நபர், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை லாவகமாக திருடி சென்றுள்ளார்.
• திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வரும் நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.