தற்போதைய செய்திகள்

யாரும் பார்க்காத நேரத்தில் டிவி -யை திருடி பிள்ளைகளிடம் நைசாக கொடுத்த அப்பா - சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 70 ஆயிரம் மதிப்புள்ள டிவியை திருடி பிள்ளைகளிடம் கொடுத்து அனுப்பிய தந்தை கைது செய்யப்பட்டார். விளாப்பாக்கத்தை சேர்ந்த வினோத் என்பவர் ஆற்காட்டில் உள்ள வீட்டு உபயோக கடை ஒன்றுக்கு சென்று, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய டிவி ஒன்றை பார்த்து பேக் செய்யுமாறு கூறியுள்ளார். பின்னர், ஊழியர்கள் யாரும் பார்க்காத நேரத்தில், டிவியை வெளியே எடுத்துச் சென்று தனது இரண்டு பிள்ளைகளிடமும் கொடுத்து எடுத்து போக சொல்லிவிட்டு, தானும் வெளியேறியுள்ளார். டிவி திருடுபொனதை கண்டுபிடித்த ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு டிவியை திருடிய வினோத்தை கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்