தற்போதைய செய்திகள்

சிக்கிய திமுக நிர்வாகி.."Arrest Him"..அதிரடியாக உத்தரவிட்ட நீதிமன்றம்

தந்தி டிவி

வடுகபாளையம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சண்முகம். இவரிடம் கடந்த ஆண்டு திமுக நகர செயலாளர் ராஜேந்திர குமார் வட்டியில்லா கடனாக 5 லட்சம் ரூபாயை ஒருமாத காலத்தில் திரும்பி கொடுப்பதாக கூறி வங்கி காசோலையை கொடுத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ராஜேந்திர குமார் கொடுத்த காசோலையை சண்முகம் வங்கியில் செலுத்திய போது, வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் காசோலை திரும்பியதாகவும், இது குறித்து ராஜேந்திர குமாரிடம் கேட்கையில் அவர் சரியான பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ராஜேந்திர குமார் மீது சண்முகம் கடந்த மார்ச் மாதம் செக் மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தார். நீதிமன்றம் சார்பில் ராஜேந்திர குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொண்ட போதும், ராஜேந்திர குமார் ஆஜராகாத காரணத்தினால், நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..