தற்போதைய செய்திகள்

ரூ.60 லட்சம் கடன் வாங்கி மோசடி..பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

புதுக்கோட்டை அருகே, கடனாக வாங்கிய 60 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கீரமங்கலம் அருகே உள்ள கரம்பக்காடு இனாம் கிராமத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் அளித்த புகாரில், முருகானந்தம் என்பவர் தொழில் செய்வதாகக் கூறி, 60 லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாகவும், ஆனால் அந்தப் பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் முருகானந்தம் செல்போனில் தொடர்புகொண்டு, தனக்கு கொலை மிரட்டல் விடுத்தததாகவும், குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றும் அந்த மனுவில் சாகுல் ஹமீது குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட முருகானந்தம், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Udhayanidhi Stalin | "மதியம் 2.15க்கு விசாரணை.." - உதயநிதி கைது விவகாரம்.. அடுத்த பரபரப்பு

Udhayanidhi Arrest உதயநிதி வாகனம் நடுவே நிறுத்தம் - பரபரப்பு காட்சிகள்

Arrest | DMK | உதயநிதி கைது.. ஆக்‌ஷன் மோடில் மு.க.ஸ்டாலின் - திமுகவே எதிர்பாராத திடீர் திருப்பங்கள்

Udhayanidhi Arrest|``உதயநிதிக்கு தேவையில்லாத வேலை.. சட்டம் தன் கடமையை செய்தது’’ -விசிக தரப்பு அதிரடி

Udhayanidhi Stalin Arrest | "குளியலறைக்கு சென்று கைது என்பது அத்துமீறல்" - அதிமுக கே.பி.முனுசாமி