தற்போதைய செய்திகள்

தேனி எம்பி தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு.. மறுப்பு தெரிவித்த ரவீந்திரநாத்

தந்தி டிவி

தேனி மக்களவை தொகுதியி ல் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத், 76 ஆயிரத்து 319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா நடந்தும் தேர்தலை தள்ளி வைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்றபோது, ரவீந்தரநாத் 3 நாட்களாக நேரில் ஆஜராகி, குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளும் சாட்சியம் அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்