தற்போதைய செய்திகள்

"அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது" - அமலாக்கத்துறை எதிர்ப்பு

தந்தி டிவி

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பில், வேலைக்காக கொடுத்த இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்தவர்கள், தற்போது அந்த வழக்கையே திரும்பப்பெற லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து இந்த வழக்கை நடத்துவது ஆச்சரியமளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தான் வழக்குப்பதிவு செய்துள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்த‌து. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?