தற்போதைய செய்திகள்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 2 மாதத்துக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை 2 மாதத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதே வேளை வழக்கு விசாரணையை விரைந்து நடத்த அனிதா ராதாகிருஷ்ணன் ஒத்துழைப்பு அளிக்காத பட்சத்தில், இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்யலாம் என்றும் கூறி, மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்த‌து.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்