தற்போதைய செய்திகள்

சரக்கு..சைடிஷ்க்கு ஊறுகாய்..திருடிய வீட்டிலேயே Party செய்த திருட்டு கும்பல்..

தந்தி டிவி

நாகை அருகே வீடு ஒன்றில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல், நிதானமாக மது அருந்தியதோடு கொள்ளையடித்த வீட்டிலேயே ஊறுகாயை சைடிஷ் ஆக பயன்படுத்திய சம்பவம் போலீசாரை கிறுகிறுக்க வைத்திருக்கிறது...

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள ஆய்மழை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தன் குடும்பத்துடன் கடந்த 10ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் கோயில் திருவிழாவிற்கு சென்றார். இதனிடையே இவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் 4 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைர தோடு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் கொள்ளையடித்த வீட்டில் சாவகாசமாக மது அருந்திய கும்பல், ஃப்ரிட்ஜில் இருந்த ஊறுகாயை சைடிஷ் ஆக தொட்டுக் கொண்டதும் தெரியவந்தது. வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு