தற்போதைய செய்திகள்

ஒரு பிரியாணி வாங்கினால் 1 இலவசம்... குவிந்த மக்கள்.. கடுப்பான கலெக்டர் - "பிச்சையா போடுறீங்க.."

தந்தி டிவி

ஒரு பிரியாணி வாங்கினால் 1 இலவசம்... குவிந்த மக்கள்.. கடுப்பான கலெக்டர் - "பிச்சையா போடுறீங்க.. கடையை மூடுங்க.."

காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக, ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என அறிவிப்பும் வெளியிட்டது. இதனால் கடை திறக்கப்பட்ட உடனேயே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், 400க்கும் மேற்பட்ட மக்கள் சாலையில் வரிசையில் குடைபிடித்தபடியும், சிலர் கையால் முகத்தை மறைத்தும் காத்திருந்தனர். காட்பாடியில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, அவ்வழியாக வந்த ஆட்சியர் குமாரவேல், கடையில் ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டதால் சீல் வைக்க உத்தரவிட்டார். விசாரணையில், மாநகராட்சியிடம் இருந்து தொழில் உரிமம் சான்றிதழை பெறாமல் பிரியாணி கடை செயல்பட்டது தெரியவந்தது. திறப்பு விழா அன்றே கடை மூடப்பட்டதால், சலுகை விலை பிரியாணியை வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்