தற்போதைய செய்திகள்

தொழில் Partner ஆக்குவதாகக்கூறி பலே மோசடி செய்த ஆசாமி... மிகுந்த கவலையுடன் பாதிக்கப்பட்ட மக்கள்

தந்தி டிவி
• திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுபட்டி பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். டெக்ஸ்டைல் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. • இவர் தனக்கு அறிமுகம் ஆன பலரிடம், தொழிலில் பார்ட்னர் ஆக்குவதாகக் கூறி, ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். • மேலும், முதலீடு செய்வதற்கு ஏதுவாக, அவர்களது சொத்துக்களை வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்று தொழில் செய்யலாம் எனக் கூறியுள்ளார். • சிவகுமாரின் பேச்சை நம்பி, 50க்கும் மேற்பட்டோர் 150 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துள்ளனர். • ஆனால், பணத்தை பெற்ற பின்பு, சிவகுமார் தலைமறைவானதுடன், தனது செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்து வைத்ததால், பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். • இதனிடையே, பாதிக்கப்பட்டவர்கள், சிவகுமாரின் அண்ணன் விஜயகுமாரின் வீட்டை முற்றுகையிட்டனர். • தகவலின் பேரில் வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்